தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாளை முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் நலன்கருதி இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக 200 பஸ்கள் புதிதாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
அத்துடன், எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் தினமும் 12 விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எதிர்வரும் 15 ஆம் திகதிவரை அச்சேவை இடம்பெறும்.