புபுரஸ்ஸ மேல்பிரிவு தோட்டத்தில் இன்று (22) பகல் 17 தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்துகொய்துகொண்டிருக்கையிலேயே மரமொன்றில் இருந்த குளவிக்கூடு கலைந்துவந்து தொழிலாளர்களை சரமாரியாக கொட்டியுள்ளன. இதனால் 17 பேர் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து 1990 நோயாளர் காவுவண்டி ஊடாக கலஹா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். 10 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பினர், ஏழு பேர் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் அண்மைக்காலமாக குளவிக்கொட்டு சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
– புபுரஸ்ஸ நிருபர் –










