பும்மாவின் உதவியாளர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வியாபாரியான “பும்மா”வின் உதவியாளரான 24 வயதுடைய சந்தேகநபர் நேற்று (23) முகத்துவாரம் பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் என்பதோடு

அவரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 09 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி, 04 தோட்டாக்கள், 20 கிராம் ஹெரோயின், இரண்டு வாள்கள், முச்சக்கர வண்டி மற்றும் போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles