புரெவி புயலால் வடக்கில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

புரெவி புயலினால் வடக்கு மாகாணத்தில் 12 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிட்டுள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 236 குடும்பங்களைச் சேர்ந்த7 ஆயிரத்து 749 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 829 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 986 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் 41 பேரும், முல்லைத்தீவில் 405 பேரும், வவுனியாவில் 236 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவெளை, புரெவி புயலால் 15 வீடுகள் முழுமையாகவும், 173 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 7 ஆயிரத்து 778 பேர் 27 பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles