புலிகளின் வைப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட தங்கத்தை பொதுவுடமையாக்காதீர்!

“தமிழீழ விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட மக்களின் தங்கம் பொது உடமையாக்கப்படக்கூடாது. அவை மக்களுக்கே உரிய வகையில் வழங்கப்பட வேண்டும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

” புலிகளின் வைப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்கம், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த செயலை பாராட்டுகின்றேன். இது மக்களின் நகைகளாகும். மக்களிடம் அதற்குரிய அத்தாட்சியும் உள்ளது. எனவே, மக்களின் தங்கம் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். அது பொது உடமையாக்கப்படக்கூடாது.

அத்தாட்சிப் பத்திரத்தை முன்வைக்க முடியாதவர்கள் அடையாளங்களைக் கூறினால், அதனை சாதகமாக பரிசீலிக்கும் ஏற்பாடும் இருந்தால் நல்லது. வடக்கு அபிவிருத்திக்கு அதை பயன்படுத்தும் யோசனையும் நல்லதுதான். ஆனால் இயலுமானவரை மக்களுக்கே வழங்குவது சிறப்பாக அமையும்.” – என செல்வம் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles