நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 29 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 84 ஆயிரத்து 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த 29 நாட்களில் மாத்திரம் 28,717 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 44,552 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய மாகாணத்தில் 6,431 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 7, 277 பேரும், ஊவா மாகாணத்தில் 2,320 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.











