இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் மற்றும் அமெரிக்காவை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவரத் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
“இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குள் அனைத்துப் தரப்பினரையும் மீண்டும் கொண்டுவர நாங்கள் எங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்” என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி (Tahir Andrabi) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் “தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான தங்களது கடமைகளை இரு நாடுகளும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும்” என்று பாகிஸ்தான் ஊக்குவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்த இடைக்கால ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக அமெரிக்காவும் ஈரானும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.










