முன்னாள் ஜனாதிபதி ரணில் பூட்டான் பயணம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு பூட்டானுக்குச் சென்றுள்ளார்.

அவருடன் அவரது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (27) பூட்டானுக்குப் புறப்பட்டுச் சென்ற ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 2ஆம் திகதி மீண்டும் நாட்டிற்குத் திரும்பவுள்ளார்.

இமயமலைத் தொடரைச் சார்ந்த அழகிய இயற்கைச் சூழலையும், தனித்துவமான கலாச்சாரத்தையும் கொண்ட தென்னாசிய நாடான பூட்டானுக்கு விஜயம் செய்து, அங்குள்ள பௌத்த விகாரைகளில் வழிபாடுகளை மேற்கொள்வது அவரது இந்த விஜயத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

Related Articles

Latest Articles