பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள தரிசு நிலங்கள், மலையக இளைஞர், யுவதிகளுக்கும் சுயதொழிலுக்காக வழங்கப்படும் என்று பெருந்தோட்டத்துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
“பெருந்தோட்டத்தில் உள்ள தரிசு நிலங்கள், ஏற்கனவே அது விளம்பரப்படுத்தப்பட்டு அமைச்சரவையின் அனுமதியுடனேயே வழங்கப்பட்டுள்ளது.
எனவே, எதிர்காலத்தில் மலையகத்தில் இருக்கின்ற இளைஞர், யுவதிகளுக்கும் சுய தொழில்களுக்காக தரிசு நிலம் வழங்கப்படும்.” எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.










