அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டராக வரலாறு படைத்தார் அப்துல் எல்-சயீத்

அமெரிக்காவின் மிச்சிகன் மாநில செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் அப்துல் எல்-சயீத், குடியரசுக் கட்சியின் மைக் ரோஜர்ஸைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

மருத்துவரும் முற்போக்குக் கொள்கைகளைக் கொண்ட அரசியல் செயற்பாட்டாளருமான அப்துல் எல்-சயீத் இந்த வெற்றிமூலம் அமெரிக்க வரலாற்றில் செனட்டராகத் தெரிவான முதல் முஸ்லிம் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

வேய்ன் கவுண்டியின் முன்னாள் சுகாதாரப் பணிப்பாளரான எல்-சயீத், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்கான கடுமையான போட்டியில் ஹேலி ஸ்டீவன்ஸை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.

தனது வெற்றியைத் தொடர்ந்து ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய எல்-சயீத்,

“ஜனாதிபதி ஒருவரின் பெயரையோ அல்லது அவர் வழிபடும் முறையையோ வெளிப்படையாகக் கேலி செய்வது ஏன் என்று பிள்ளைகளுக்கு விளக்குவதற்குச் சிரமப்பட்ட பெற்றோர்கள் அனைவரிடமும், தீயவர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள் என்பதைத் தெரிவியுங்கள்” என்று கூறினார்.

தேர்தல் பிரசாரக் காலம் முழுவதும் தமக்கு எதிராக இஸ்லாமியர்களுக்கு எதிரான மற்றும் இனவாதக் கருத்துகளை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகியோரையும் எல்-சயீத் கடுமையாக விமர்சித்தார்.

ட்ரம்பை நோக்கி அவர் கூறுகையில்,

“டொனால்ட், எனது பெயரை உச்சரிப்பதில் உங்களுக்குச் சிரமம் இருந்தது என்பது எனக்குத் தெரியும். எனவே, ஜனவரி மாதம் ஜே.டி. வான்ஸ் எனக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த பின்னர், என்னை ‘செனட்டர்’ என்று அழைக்கலாம்” எனக் குறிப்பிட்டார்.

மிச்சிகன் மாநிலத்தில் 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் குடியரசுக் கட்சி செனட் தேர்தலில் வெற்றி பெற்றதில்லை. எனினும், இரண்டு தடவைகள் செனட்டராகப் பதவி வகித்த ஜனநாயகக் கட்சியின் கேரி பீட்டர்ஸ் ஓய்வுபெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இம்முறை குடியரசுக் கட்சிக்கு அரிய வாய்ப்பு உருவானது.

இதனால், அமெரிக்க செனட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான தேசிய அளவிலான அரசியல் போட்டியில் மிச்சிகன் தேர்தல் முக்கியத்துவம் பெற்றது. கடந்த ஆகஸ்ட் 4ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குப் பின்னர், இந்தத் தேர்தல் விளம்பரங்களுக்காக 100 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles