புலிகளை நினைவுகூரவே தடை – மக்களை அல்ல என்கிறார் மஹிந்த

போரில் உயிர் நீத்த உங்கள் உறவுகளை, உறவுகள் என்ற ரீதியில் நீங்கள் தனித்தனியே நினைவேந்துங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:–

“போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கையில் எந்த அரசும் தடைவிதிக்கவில்லை. நினைவேந்தல் காலங்களில் விடுதலைப் புலிகளையும் நினைவேந்துவதால்தான் சிக்கல் நிலை ஏற்படுகின்றது. தடைகளும் வருகின்றன.

தமிழ் மக்களிடம் நான் கூறிக்கொள்ள விரும்புவது போரில் உயிர் நீத்த உங்கள் உறவுகளை, உறவுகள் என்ற ரீதியில் நீங்கள் தனித்தனியே நினைவேந்துங்கள். அதைவிடுத்து புலிப்பயங்கரவாதிகளை நினைவேந்தும் நிகழ்ச்சி நிரலுக்குள் நீங்களும் பங்கேற்று உங்கள் உறவுகளை நினைவேந்துவதைத் தவறவிடாதீர்கள்.” – என்றார்.

Related Articles

Latest Articles