நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட 60 இலட்சத்திற்கும் அதிகமான நபர்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து பூஸ்டர் தடுப்பூசியினைப் பெறாத நிலைமையானது கடுமையான ஆபத்தை ஏற்படுத்துமென தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.
கொரொனா வைரஸ் தடுப்பூசி இரண்டினை மாத்திரம் பெற்றுக்கொண்ட நபர்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைவடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
