புதிய ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்படவுள்ள காமினி செனரத், 2022 பெப்ரவரி மாதம் கடமையேற்பாரென அறியமுடிகின்றது.

ஜனாதிபதி செயலாளர் பதவியை வகிக்கும் கலாநிதி பிபீ ஜயசுந்தர, அப்பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். 2022 ஜனவரி 30 ஆம் திகதி முதல் அவர் இவ்வாறு விலகவுள்ளார்.
அதன்பின்னர் பெப்ரவரி மாதம் முதல் காமினி செனரத் கடமைறேப்பார். காமினி செனரத் பிரதமர் மஹிந்தவுக்கு நெருக்கமானவர். தற்போது அலரிமாளிகையில் முக்கிய பதவி வகிக்கின்றார்.
ஜனாதிபதி செயலாளர் பதவியில் இருந்து விலகும் பிபீக்கு நிதி அமைச்சின் உயர் பதவியொன்று காத்திருக்கின்றது.










