பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு ஏக்கர் காணி! தமிழ்க் கூட்டமைப்பு பரிந்துரை

“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு இனவாதம், மதவாதம் உங்களை விடாது, 7 பேர்ச்சஸ் காணியை வைத்து என்ன செய்ய முடியும்? எனவே, அவர்களுக்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்கவும்.”

இவ்வாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னமும் உரிய சம்பளம் இல்லை. அற்ப சம்பளத்துக்குகூட போராட வேண்டியுள்ளது.

குறிப்பாக 7 பேர்ச்சஸ் காணி என்ற வரையறைக்குள் அவர்கள் ஏமாற்றப்படுகின்றனர். 5 பேர் கொண்ட குடும்பமொன்றுக்கு 7 பேர்ச்சஸ்க்குள் வாழ முடியுமா?

எனவே, அம்மக்களுக்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்கவும் .விவசாய உற்பத்தியில் ஆற்றல் மிக்கவர்கள் அவர்கள். சிறந்த அனுபவம் உள்ளது. அவர்களுக்கு காணிகளை வழங்கி ஆற்றலை வெளிப்படுத்த இடமளியுங்கள். அப்போது நாடும் முன்னேறும்.” – என்றார்.

Related Articles

Latest Articles