பெருந்தோட்ட இளைஞர்களை வெளிநாடு அனுப்புவதாகக்கூறி மோசடி – மேலும் ஒருவர் கைது!

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுதருவதாக பண மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒரு சந்தேக நபர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட இளைஞர்களை இலக்கு வைத்து வெளிநாடு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதுளை, பசறை, லுணுகலை ஆகிய பொலிஸ் நிலையங்களில் பாதிக்கப்பட்ட இளைஞர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுவருகின்றது.

இதன்பிரகாரம் பதுளை பொலிஸாரால் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு மேலும் லுணுகலையைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரும் லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த அதிபரை எதிர்வரும் 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பசறை பொலிஸாரினால் 43 வயதுடைய லுணுகலை அடாவத்தைப் பகுதியை சேர்ந்த , லுணுகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் காவலாளியை நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும் தற்போது பசறை, லுணுகலை, பதுளை ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்களினால் பண மோசடி தொடர்பாக புகாரளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ராமு தனராஜா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles