பெருந்தோட்ட மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் பாதீடு!

பெருந்தோட்ட மக்களின் வாழ்வியல் மற்றும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் நூலகத்தை புனரமைப்பதற்கு பாரிய நிதி ஒதுக்கியுள்ளமை ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் சிறந்த அபிமானமாகும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற அமர்வில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி முன்வைத்தார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” இலங்கைவாழ் ஒட்டுமொத்த மக்களையும் உள்ளடக்கிய வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த கால வரவு செலவுத் திட்டங்களில் எவ்வாறான முன்மொழிவுகள் காணப்பட்டது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஆனால் இம்முறை உழைக்கும் மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் சார்பான வகையில் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ் நூலகத்தை புனரமைப்பதற்கு பாரிய நிதி ஒதுக்கியுள்ளமை விசேட அம்சமாகும்.இது வடக்கு மக்களுக்கு மாத்திரமல்ல, உலக வாழ் தமிழர்களுக்கும் சிறந்ததொரு அபிமானமாகும்.

பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தோட்ட மக்களின் சம்பள விவகாரம் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.கூட்டு உடன்படிக்கை, நிர்ணய சபை என்று பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் தீர்வு கிடைக்கவில்லை.

இவ்வாறான நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கு 1700 சம்பளத்தை வழங்குவதற்கான திட்டங்கள் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.பெருந்தோட்ட மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதற்கும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்குமான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்வதற்கும், தோட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கும் விசேட திட்டங்களை முன்வைத்துள்ளோம்.மக்களுக்கான இந்த பாதீட்டை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவோம் என்றார் கிட்ணன் செல்வராஜா.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles