பெருந்தோட்ட மக்களின் உண்மையான சமூகமயமாக்கலுக்காக நிரந்தர காணி உறுதிகளை வழங்குவதாகவும் இவர்களுக்கான வசிப்பிட உரிமையை இனி சலுகைப் பத்திரத்தில் மட்டுப்படுத்தாமல் தொடர்வதாகவும் பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இருநூறு வருட கால வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட மக்களே,காணி உரிமைகளின்றி பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தோட்ட மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு முழு உரிமை வழங்குவது தொடர்பாக கேகாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுபற்றித் தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவின் பிரகாரம் பெருந்தோட்ட மக்களுக்காக புதிய கிராமங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.” – என்றார்.