இலங்கை தனியார் பெற்றோலிய தாங்கி போக்குவரத்து உரிமையாளர்கள் தமது சேவையிலிருந்து விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எரிபொருள் தாங்கி போக்குவரத்து செலவீனங்கள் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் போக்குவரத்து கட்டணங்களை அதிகரிக்கும் வரை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சேவையிலிருந்து இடைவிலகிக்கொள்வதாக இலங்கை தனியார் பெற்றோலிய தாங்கி போக்குவரத்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தங்களது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் பாராமுகமாக செயற்படுமாயின் தொடர்ந்து சேவையிலிருந்து விலகிச்செயற்படவும் தீர்மானித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
