ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடிவேல் சுரேஷ் எம்.பிக்குமிடையில் சபையில் கடும் கடும் சொற்போர் மூண்டது.
பாராளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பிய வடிவேல் சுரேஷ் எம்.பி.,
” இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்துக்குள் ஆயுதங்கள் சகிதம் பலவந்தமாக நுழைந்த ஐக்கிய தேசியக்கட்சி முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்கள் சிலர் சொத்துகளுக்கு சேதம் விளைவித்து, மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் எனக்கும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்தும் இன்னும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. எனவே, சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என” சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த ரணில், தொழிற்சங்கத்தில் நடந்த விவகாரம் பற்றியும், வழக்கு விசாரணை சம்பந்தமாகவும் விவரித்தார். இடையிடையே வடிவேல் சுரேஷ் எம்.பி. இடையூறு விளைவித்தார். இதனால் கடுப்பான ரணில் விக்கிரமசிங்க, ” அந்த பைத்தியக்காரனை அமர சொல்லுங்கள்” – என குறிப்பிட்டார். பைத்தியக்காரன் என்ற வசனத்தை இரு முறைகள் பயன்படுத்தினார்.
வடிவேல் சுரேசுக்கு சார்பாக ஹரின் பெர்ணான்டோ கருத்து வெளியிட்டார்.
முழுமையான வீடியோ இணைப்பு