பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: 8 பேர் பாதிப்பு

குளவிக்கொட்டுக்கு இலக்கான 8 பெண் தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட இரண்டாம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இந்த சம்பவம் 20.06.2024.வியாழக்கிழமை காலை 9.30மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மரம் ஒன்றில் இருந்த குளவி கூட்டில் பருந்து மோதியதையடுத்து, குளவிகள் கலைந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளன.

குளவிக்கொட்டுக்கு இலக்கான 8 பெண் தொழிலாளர்களுள் 06 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு மேலும் இருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் ஏ.எகே.ஜெயசூரிய தெரிவித்தார்.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Related Articles

Latest Articles