பொகவந்தலாவையில் மாணவியை விடுதிக்கு அழைத்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில், மாணவியிடம் தகாதமுறையில் நடத்துகொண்டார் எனக் கூறப்படும் ஆசிரியரை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் நுற்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவியை, மாலைவேளையில் ஆசிரியர் விடுதிக்கு வருமாறு குறித்த ஆசிரியர் நேற்று முன்தினம் 15 ஆம் திகதி கூறியுள்ளார். இதன்படி மாணவியும் அங்கு சென்றுள்ளார். இது பற்றி அறிந்த மக்கள், குறித்த ஆசிரியரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து மாணவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

தன்னை படுக்கையறைக்கு செல்லுமாறும், தன்னிடம் தகாத முறையில் நடந்துகொள்வதற்கும் ஆசிரியர் முற்பட்டார் என மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்பின்னர் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

மருத்துவ பரிசோதனைக்காக மாணவி கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Related Articles

Latest Articles