பொகவந்தலாவ, கொட்டியாகலை பகுதியில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 2ஆம் திகதி இரண்டாவது தடவையும் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனைமூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டது. முதல்சுற்று பரிசோதனையில் வைரஸ் தொற்றவில்லை என்ற முடிவு வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புபட்ட நபரொருவர் அண்மையில் கொட்டியாகலை பகுதியிலுள்ள வீட்டுக்கு வந்துள்ளார். அவருக்கு வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த உறவினர்கள் மூவருக்கே வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.
க.கிசாந்தன்