பொது சின்னம் குதிரையா?

ஜனாதிபதி தேர்தலில் தேசிய வேட்பாளராகக் களமிறங்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க, பொது சின்னமாக குதிரை சின்னத்தை தேர்ந்தெடுக்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொது கூட்டணியின் பெயர், சின்னம் என்பன பற்றிய இறுதி கட்ட கலந்துரையாடல் தற்போது இடம்பெற்றுவருகின்றது.

யானை, அன்னம் மற்றும் மொட்டு என்பன பொது சின்னமாக இருக்ககூடாது என பெரும்பாலானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதனால் பொதுசின்னமாக குதிரை சின்னத்தை தேர்ந்தெடுப்பது பற்றி ஜனாதிபதி ஆராய்ந்துவருகின்றார். கப்பல் சின்னத்தை ஏற்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், பொருளாதார போரில் வெல்வதற்கு குதிரைபோல் வேகமாக பயணிக்ககூடிய ஒருவரே தேவை என்ற பிரசாரம் இதன்மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles