பொது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மனோவின் நிலைப்பாடு என்ன?

பொது ஜனாதிபதி வேட்பாளர் முன்மொழிவு தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளதாவது,

“ சமூக பரப்பில், அவரவர் கொண்டுள்ள நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இத்தகைய முன்மொழிவுகளை தெரிவிக்க எவருக்கும் உரிமை உண்டு.

ஆனால், இது பற்றி எவரும் என்னிடம் உரையாடவில்லை.
பொது வெளியில் இருக்கின்ற அறியப்பட்ட அரசியல்வாதிகள் தொடர்பில் இத்தகைய கருத்துகள் அவ்வப்போது தெரிவிக்க படுவது இயல்பானது.

இரண்டரை தசாப்தங்களுக்கு மேலான அரசியல் வரலாற்றை கொண்ட நான், இன்று ஒரு கட்சி மற்றும் பரந்த கூட்டணி தலைவர்.
இந்நிலையில், இதுபற்றி இதைவிட கருத்து எதுவும் கூற நான் விரும்பவில்லை.” – என்றார் மனோ.

Related Articles

Latest Articles