மஹிந்த ராஜபக்சவை கடுமையாக விமர்சித்த பொன்சேகாமீது கடும் சொற்போர் தொடுத்துள்ளது மொட்டு கட்சி. அவரை மக்கள் விரைவில் அரசியல் குப்பைத் தொட்டிக்குள் இழுத்து போடுவார்கள் என்று மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பிரபாகரன் தப்பிச்செல்வதற்கு மஹிந்த ராஜபக்ச போர் நிறுத்தம் வழங்கினார், போர் காட்டிக்கொடுக்கப்பட்டது என பொன்சேகா கூறினார் எனக் கூறப்படும் விடயம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சாகர காரியவசம் கூறியவை வருமாறு,
‘இந்நாட்டை யார் பாதுகாத்தது என்ற உண்மை நாட்டு மக்களுக்கு தெரியும். இராணுவத்தில் இருந்த பிரதானிகளுக்கும் இது தெரியும். எனவே, தமது அரசியல் தேவைக்காக அறிவிப்புகளை விடுக்கும் நபர்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. மக்கள் அவர்களை அரசியல் குப்பை தொட்டியில் இழுத்து போடுவார்கள்.”- என்றார்.