ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை அக்கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இத்தடை உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும்.
கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிட்டு, பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (19) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
