பொருளாதார நெருக்கடி – ஹாலிஎல மக்கள் குறைந்தது 10 நாட்களாவது பட்டினியில்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது,  உயர்தட்டு மக்கள் முதல் ஏழ்மையான மக்கள் வரை அனைவரையும் ஆட்டம் காணவைத்துள்ளது.

மறுபுறத்தில் பொருட்களின் விலையேற்றம் மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. குறிப்பாக எரிபொருள் விலையேற்றத்தின் பின்னர் பெரும்பாலான பிரதேசங்களில் பஸ் கட்டணம் அதி உச்சத்தை தொட்டுள்ளது .

சில சமயங்களில் எரிபொருள் விலையை குறைத்தாலும் பஸ்  கட்டணத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை என பண்டாரவளை, ஹாலிஎல மக்கள் தெரிவிக்கின்றனர்.

உயர்தர வகுப்புகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற  மாணவர்கள் தங்களுக்கு இன்னும் கல்லூரி நுழைவுக்கான எந்தவொரு பதிலும்  கிடைக்காத காரணத்தினால் அவர்கள் அவர்களுடைய கிராமங்களுக்கு அண்மையிலுள்ள நகரங்களில் பணிபுரிவதாகவும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு 15000-20000 வரையேயான  மாத சம்பளம் கிடைக்க பெறுவதாகவும் தெரிவித்தனர்.

தங்களுடைய குடும்ப சூழ்நிலையானது மிக கடினமாக  இருக்கும் நிலையில்  போக்குவரத்துக்காகவே பாதி சம்பளம் தீர்ந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் , மாத இறுதியில்  குறைந்தது 10 நாட்களாவது தங்கள் பட்டினியில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles