போதை மாத்திரைகளுடன் சகோதரர்கள் கைது!

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்போபுர பகுதியில் போதை மாத்திரைகளுடன்இருவர் சர்தாபுர விசேட அதிரடிப்படையினரால் நேற்று(17) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 26, 28 ஆகிய வயதுகளையுடைய அண்ணன், தம்பி என பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடமிருந்து 362 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த இரண்டு சந்தேக நபர்களையும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் உப்புவெளி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles