போராட்டக்காரர்கள்மீது கண்ணீர் புகை பிரயோகம் – ஜனாதிபதி மாளிகை முன் பதற்றம்!

கொழும்பு, கோட்டை செத்தம் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மீண்டும் இரண்டாவது தடவையாக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடுவதற்கு போராட்டக்காரர்கள் முயற்சித்தனர்.

இதனையடுத்தே கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. கொழும்பில் ஏனைய சில இடங்களிலும் போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பை சூழ இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles