போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் – சனத் நிஷாந்த எம்.பி. கைது!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சனத் நிஷாந்த, குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

மைனாகோகம  மற்றும் கோட்டாகோகம போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் சில அரசியல் பிரமுகர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Related Articles

Latest Articles