” போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை.” என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
அலாஸ்காவில் உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் – ரஷ்ய ஜனாதிபதி புடினும் 3 மணி நேரமாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக, ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ,
” போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
பேச்சுவார்த்தை நாளில் கூட, மக்களை ரஷ்யா கொலை செய்கிறது. சமீபத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியர்களுடன் உண்மையிலேயே என்ன வேலை செய்ய முடியும் என்பது குறித்து விவாதித்தோம். போருக்கு நியாயமான முடிவு அனைவருக்கும் தேவை. போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் முடிந்தவரை வேலை செய்யத் தயாராக உள்ளது.
அமெரிக்காவின் வலுவான நிலைப்பாட்டை நாங்கள் நம்புகிறோம். வரவிருக்கும் விவாதங்களுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். ரஷ்யா தானே தொடங்கி பல ஆண்டுகளாக இழுத்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். கொலைகள் நிறுத்தப்பட வேண்டும்.
குறைந்தபட்சம், உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்ய தரப்பு பயனுள்ள முடிவுகள் சாத்தியமாகும். பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை. நீடித்த அமைதி தேவை. முக்கிய நோக்கங்கள் அனைவருக்கும் தெரியும். உண்மையான முடிவுகளை அடைய உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.”- என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.