உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவுடன் இணைந்து போரிட்டுவரும் வடகொரிய படையினர், ஆபாச படங்களை பார்க்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன்மீது ரஷ்யா 2022-ம் ஆண்டு பெப்ரவரியில் படையெடுத்தது போர் தொடுத்து 2 ஆண்டுகள் ஆகியும் அதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.
உக்ரைனுக்கு எதிரான போரில் 10 ஆயிரம் வடகொரிய படையினரை அனுப்ப ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், ஏ.கே.-12 ரக துப்பாக்கிகள், பீரங்கி குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை ஏந்திய வடகொரிய படையினர் உக்ரைனை ஒட்டிய எல்லை பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
ரஷ்ய போரில் அந்நாட்டுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ரஷியாவின் கிழக்கே வெவ்வேறு 5 தலங்களில் அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை உக்ரைனின் பாதுகாப்பு உளவு பிரிவு தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், வடகொரிய படையினருக்கு தடையற்ற இணையதள வசதி கிடைத்துள்ளது. இது அவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் விசயம். போருக்காக வந்த இடத்தில், இதனை பயன்படுத்தி கொண்ட படையினர், இணையதளம் வழியே ஆபாச படங்களை பார்த்து வருகின்றனர் என தி பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், உக்ரைனுக்கு கிம் ஜாங் அன் அனுப்பி வைத்த வடகொரிய படையினர் இந்த இணையதள பயன்பாடு கிடைத்தது பற்றிய விவரங்கள் எப்படி வெளிவந்தன என்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ரஷியாவின் குர்ஸ்க் பகுதியில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள வடகொரிய வீரர்கள் முதன்முறையாக கடந்த புதன்கிழமை உக்ரைன் படையுடன் மோதலில் ஈடுபட்டனர்.