ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, இன்று வீதியில் இறங்கி போராடினார்.
பொலன்னறுவை நகரில் இன்று (03) விவசாயிகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தில் தனது மகன் சகிதம் மைத்திரி பங்கேற்றிருந்தார.
நெல்லுக்கு உரிய விலை வழங்குமாறு கோரியே இப்போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுடன் வீதியில் அமர்ந்து, அரசாங்கத்துக்கு எதிராக மைத்திரி கோஷம் எழுப்பினார்.










