நாட்டில் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 330 வரை அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் கடந்த 25 நாட்களுக்கு 8, 728 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், 2023 இல் இதுவரையான காலப்பகுதியில் 85 ஆயிரத்து 516 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திலேயே டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.