கொழும்பு, பதுளை பிரதான வீதியின் ஹாலிஎல – உடுநுவர பகுதியில் இருந்து தூர பிரதேசங்களுக்கான பஸ் போக்குவரத்து இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், அப்பகுதி ஊடாக பாடசாலை பஸ்கள் மற்றும் குறுகிய தூரத்துக்கான பயணிகள் போக்குவரத்து பஸ்கள பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹாலிஎல – உடுநுவர வீதியில் ஏற்பட்ட மண்சரிவால் அவ்வீதி ஊடான கனரக வாகன போக்குவரத்து நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டது.
மாற்றுவழியாக எட்டாம்பிட்டிய, மாலிகாதென்ன ஊடாக பண்ராவளை வீதியை பயன்படுத்துமாறு அனுமதிக்கப்பட்டுள்ளது.










