பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புவக்குடுமுல்ல பகுதியில் புதிதாக மதுபானசாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் அறநெறி பாடசாலை மாணவர்களும், மதகுருமார், பொதுமக்களும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த பகுதியில் மத வழிபாட்டு ஸ்தலங்களும், பாடசாலைகளும் காணப்படுவதாகவும் இப்பகுதியில் மதுபான சாலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாககூறி பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.










