நுவரெலியா மாவட்டம் உட்பட மலையகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த இரு நாட்களாக தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழையினால் ஓடைகளிலும் ஆறுகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், காசல்ரி, மவுசாகலை, கெனியன், லக்ஸபான போன்ற நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்வடைந்துவருகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் வாகன சாரதிகள் வாகனங்களை மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு ஹட்டன் வலய போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்