மனித இறைச்சி சமைத்து விற்பனை செய்த பெண் கைது!

மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் உணவகத்தில் மனித இறைச்சி சமைத்து விற்ற வந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உலகிலேயே குற்றச்சம்பவங்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்று நைஜீரிய, இதற்கு முக்கிய காரணங்கள் வறட்சி, பஞ்சம், ஏழ்மை ஆகும்.இந்தநிலையில், அனாம்ப்ரா மாகாணத்தில் உள்ள குறிப்பிட்ட உணவகத்தில் மனித இறைச்சி விற்கப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, திடீரென பொலிஸார் உணவகத்தில் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது மனித இறைச்சி விற்கப்படுவது கண்டறியப்பட்டது.இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்ட மனித உடல் பாகங்களையும் சமைக்க தயாராக இருந்த இறைச்சியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், உணவகத்தை நடத்தி வந்த பெண்ணை கைது செய்துள்ளனர். இறைச்சிக்காக நபர் கொல்லப்பட்டரா அல்லது அது இறந்தவர்களின் உடலா என்பது குறித்த தகவலை போலீசார் வெளியிடவில்லை.

2015 ஆம் ஆண்டு இதே அனாம்ப்ரா மாகாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் மனித இறைச்சி விற்கப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். இக்கொடூர செயலில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.

Related Articles

Latest Articles