மனோ, திகா, ராதா, ஜீவன் சர்வக்கட்சி அரசுக்கு முழு ஆதரவு! இன்று முக்கிய கூட்டங்களுக்கு ஏற்பாடு!!

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

சர்வக்கட்சி அரசு சம்பந்தமாக இதன்போது விரிவாக அலசி ஆராயப்படவுள்ளது.

அத்துடன், விமல், வாசு உட்பட 9 கட்சிகளின் கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உட்பட மலையக கட்சிகள் சர்வக்கட்சி அரசுக்கு முழு ஆதரவை வெளியிட்டுள்ளன.

Related Articles

Latest Articles