மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: மேலும்மொரு சந்தேக நபர் கைது!

மன்னார் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் வைத்தே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles