மரண வீட்டில் தங்க நகைகள் திருட்டு

ஹாலிஎல பிரதேசத்தில் மரண வீடொன்றில் அலுமாரியில் இருந்த தங்கநகைகள் திருடப்பட்டுள்ளன.

சந்தேகநபர் மரணவீடொன்றில் கலந்து கொண்டு அங்கு அலுமாரியில் தங்கப்பொருட்களை திருடியுள்ளார். இதனையடுத்து ஹாலிஎல பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் அதற்கு முன்னர் பல்வேறு குற்றங்களை செய்து சிறைத்தண்டனை பெற்றவர் எனவும் பொலிஸார் தெரிவித்தார்.

அண்மையில் ஹாலிஎல அந்துடுவாவல பகுதியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கின் போது வீட்டின் அறையொன்றிலுள்ள அலுமாரியில் இருந்த இரண்டு தங்க மோதிரங்கள் மற்றும் ஒரு ஜோடி காதணிகளை யாரோ ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் ஹாலிஎல பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி, ஹாலிஎல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ருவன் குணதிலக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.எம். தயானந்த உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். பல சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவரிடமிருந்து மரண வீட்டில் காணாமல் போன தங்கநகைகள் மீட்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles