மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரிமாளிகை திரும்பியுள்ளார் என தெரியவருகின்றது.
நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி வைத்தியசாலைக்குச்சென்று, மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கான ஆரம்பக்கட்ட பரிசோதனையில் நோய் தீவிரம் அறியப்பட்டுள்ளது எனவும், அதன்பின்னர் மேலதிக பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது.
மேற்படி மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரிமாளிகை திரும்பியுள்ளார்.
அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனியார் வைத்தியசாலையொன்றில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வெளியாக தகவலை அவரின் மகனும், பிரதமர் அலுவலக பணிக்குழாமின் பிரதானியுமான யோஷித்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
அத்துடன், தான் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனியார் வானொலியிடம் தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் நடைபெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னரே மருத்துவ பரிசோதனைக்கு பிரதமர் சென்றுள்ளார் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.










