மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடல் உறுப்புகளை பாதுகாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு

மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடல் உறுப்புகளை பாதுகாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரச பகுப்பாய்வாளர் மற்றும் நீதி வைத்திய அதிகாரி ஆகியோருக்கு இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறைந்த இலங்கை வர்த்தகரின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக அவரது உடல் உறுப்புகளை பாதுகாக்க நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மறைந்த வர்த்தகரின் குடும்பத்தினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles