மலேசியாவில் வேலைவாய்ப்பு எனக்கூறி சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று மோசடி!

மலேசியாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி இரண்டரை இலட்ச ரூபா வீதம் மோசடி செய்த ஒருவரை கண்டி, பூஜாப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மலேசியாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி இருவரிடம் பணம் பெற்று சிங்கப்பூர் விசாவை பெற்றுக் கொடுத்ததாக பூஜாப்பிட்டிய பொலிஸ்நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடு​த்து சந்தேக நபர் ஒருவர் அக்குறணை ‘கிங்ஸ்கோட்’ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கலகெதர நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோது விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.

இவ்வாறு நாட்டின் பல பாகங்களிலுமுள்ளவர்களை மலேசியாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று கைவிட்டுள்ளதால் அவர்கள் நிர்க்கதியாகியுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles