மலை நாட்டில் கடந்த சில நாட்களாக மீண்டும் மழைபெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் அதிகரித்துவருகின்றது.
மவுசாகலை, கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, விமலசுரேந்திர, காசல்ரீ, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துவருகின்றது.
இதனால் விமலசுரேந்திர நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
மேலும் மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் மோகினி எல்ல பகுதிகளில் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்தது கொண்டு உள்ளது.இதன் காரணமாக மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதி மூடப்பட்டுள்ளது.
அத்துடன் இவ் வீதி ஊடாக வாகனங்கள்,பயணிகள், பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர் செ.தி. பெருமாள்










