மலையகத்திற்கு பெருமை சேர்க்கும் கால்பந்து வீரர் ஜோன் ஸ்டீபன் ராஜ் கௌரவிப்பு

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் நாட்டின் முதன்மைத் தரக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரான FFSL Super League 2025/26 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நாட்டின் முன்னணி 10 கால்பந்தாட்டக் கழகங்கள் பங்கேற்கின்றன.

இந்நிலையில், நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தைச் சேர்ந்த சன் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் நட்சத்திர வீரரான ஜோன் ஸ்டீபன் ராஜ், ப்ளூ ஈகிள்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் மலையகத்தைச் சேர்ந்த வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும், உயர்மட்ட கால்பந்தாட்டப் போட்டிகளில் மலையகத்தின் சார்பில் திறமையை வெளிப்படுத்தி வருவதையும் கௌரவிக்கும் வகையில், இன்று நுவரெலியா கல்வே விளையாட்டுக் கழகத்தினரால் ஜோன் ஸ்டீபன் ராஜ் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மலையக இளைஞர்கள் தேசிய மட்டத்திலான விளையாட்டு அரங்கில் முன்னேறுவதற்கு ஜோன் ஸ்டீபன் ராஜின் பயணம் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

Related Articles

Latest Articles