மலையகத்தில் மலர்கிறது புதிய கட்சி!

 

மலையகத்தை மையப்படுத்தியதாக புதியதொரு அரசியல் கட்சி விரைவில் உதயமாகவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதற்குரிய பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது எனவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமையில் மலரவுள்ள இக்கட்சியில், தற்போது மலையகத்தில் செயற்படும் கட்சிகளில் அதிருப்தி நிலையில் உள்ளவர்கள் சங்கமிக்கவுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

மலையக மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக போராடும் தரப்புகளுடனும் பேச்சு நடத்தப்படவுள்ளது என தெரியவருகின்றது.

அடுத்த வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலிலும் புதிய கட்சி களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு –  செய்திக்கு பயன்படுத்தப்பட்ட படம் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது.

Related Articles

Latest Articles