‘மலையகம் இனியும் இப்படி பயணிக்கமுடியாது’ – மாற்றத்தை ஏற்படுத்த இளைஞர்களுக்கு முரளி அழைப்பு

லிந்துலை பிரதேசத்தில் மலையக இளைஞர்களுக்கான விளையாட்டுப் பயிற்சி நிறுவனம் நிர்மாணிக்கப்படும் என்று இலங்கைக் கிரிக்கெட் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஏக்கரில் அமையவுள்ள இந்த விளையாட்டு நிறுவனத்தில், விளையாட்டு வீர, வீரங்கனைகள் தங்கியிருந்து பயிற்சிப் பெறுவதற்கான வசதிகளும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு வர்த்தக பிரமுகர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முத்தையா முரளிதரன் மேலும் கூறியதாவது,

” மலையக இளைஞர்கள் தொழிலுக்காக தொடர்ந்தும் கொழும்பு வரும் நிலைமை தொடரக்கூடாது. மலையக இளைஞர்கள் தமது சொந்த காலில் நிற்கவேண்டும். அதற்காக சுயதொழில்துறையில் முன்னேற்றமடைய வேண்டும். சுயதொழில் பெறுவதற்கான வசதிகளை நாம் செய்துகொடுக்கத் தயார். இதற்கு அரசாங்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.

கடந்த 20 வருடங்களாக நாம் சமூக சேவையில் ஈடுபட்டுள்ளோம். இவற்றை நாம் வெளியில் சொல்லிக் கொள்வதில்லை. இருந்தாலும் இன்று சொல்கிறோம். ஏற்கனவே பதுளையில் எமது தொழில்கல்வி நிறுவனங்கங்கள் இருக்கின்றன. தற்போது நுவரெலியாவிலும் ஐந்து தொழில்கல்வி நிறுவனங்களை அமைக்கவுள்ளோம். தற்போது எனது சகோதரன் நுவரெலியாவில் தேர்தலில் போட்டியிடுகிறார்.

அவருக்கு நீங்கள் விரும்பினால் வாக்களிக்கலாம். ஆனால் இந்த அரசாங்கம் தான் அடுத்த பத்து வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கப் போகிறது. எனவே, அரசாங்கத்தின் பங்காளிகளாக நாமும் இருக்க வேண்டும். அப்போது உங்களுக்குத் தேவையானவற்றை அரசாங்கத்திடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். அரசாங்கத் தரப்பில் போட்டியிடும் சகோதரன் பிரபு வெற்றி இதனை நாம் நிச்சயம் செய்வோம். அதற்கான அங்கீகாரத்தையே உங்களிடம் கேட்கிறோம்.

சகோதரனுக்கு வாக்களிக்காவிட்டாலும், நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். நுவரெலியாவில் தொழில்பயிற்சி நிலையங்களை நாங்கம் அமைப்போம். அதனைத்தவிர, லிந்துலையில் மலையக இளைஞர்களுக்கான விளையாட்டுப் பயிற்சி நிறுவனமொன்றையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக ஐந்து ஏக்கர் காணியும் பார்த்துள்ளோம். இதனை நிச்சயம் செய்துமுடிப்போம்.

இதனைத்தவிர, விவசாயம், கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, சுற்றுலா, விளையாட்டு ஆகிய துறைகள் வளர்ச்சி பெறவேண்டும். அரசாங்கத்தில் ஏராளமான திட்டங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் பெற்றுக்கொள்ள முடியும். கடந்த 20 வருடங்களாக தற்போதைய ஜனாதிபதியுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. அவர் நிச்சயம் செய்வார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அவர் தோல்வியடைந்தாலும், மலையகத்திற்கு செய்யும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்.

அவரை ஒரு அரசியல்வாதியாக நான் பார்க்கவில்லை. அவர் சிறந்த அரச நிர்வாகி. மலையகத்தை சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான திட்டம் இருக்கிறது. அதனை ஜனாதிபதி நிச்சயம் செய்வார். அப்படி செய்யும்போது நுவரெலியாவில் சுற்றுலாதுறை சார் தொழில்கள் உருவாகும்.  அத்துடன், இந்திய வீட்டுத் திட்டத்தில் இருந்து வீடுகளைப் பெற்றுக்கொடுப்போம்.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் இதுவரை 2000 ஆயிரம் வீடுகளை மட்டுமே கட்டி முடித்ததாக கூறுகின்றனர். இன்னும் 2000 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் இன்னும் நடப்பதாக கூறுகின்றனர். இதனை நான் கூறவில்லை. அவர்களே கூறியுள்ளார்கள். ஆனால், இந்தியா 14,000 வீடுகளை வழங்கியுள்ளது. இதனை ஏன் செய்துமுடிக்கவில்லை. அவர்களுக்குத் தேவையில்லை, அல்லது செய்யத் தெரியவில்லையா என்பது எனக்கு புரியவில்லை.

ஆனால், நாங்கள் இதனை செய்து முடிப்போம். எனது சகோதரன் ஊடாக இவற்றை நிச்சயம் நாங்கள் நிறைவேற்றுவோம். மலையகம் இனியும் இப்படி பயணிக்க முடியாது. அதனால் இளைஞர்கள் ஒரு திடமான தீர்மானத்தை எடுக்க வேண்டும். மலையகத்தை மாற்றும் சக்தி இளைஞர்களிடம் இருக்கிறது. இம்முறை இளைஞர்கள் களமிறங்கியுள்ளனர். அவர்களுக்கு வாக்களியுங்கள். எனது சகோதரனும் இளைஞன் அவருக்கு வாக்களிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வெற்றியின் பங்காளியாக மாற முடியும்.

அத்துடன் அரசாங்கத்திடம் இருந்து பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நாம் மலையகத்திற்கு எடுத்து வருவதற்கு அங்கீகாரமாக இருக்கும். இந்த செய்தியை ஊரில் உள்ள உங்களின் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று முத்தையா முரளிதரன் இதன்போது தெரிவித்தார்.

கொழும்பு வர்த்தக பிரமுகர்கள்  ஒழுங்குசெய்திருந்த நிகழ்வில், சுமார் 300 இற்கும் மேற்பட்ட கொழும்பில் பணிபுரியும் இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles