‘மலையகம் – 200’ பெருவிழா – ஜீவனின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

மலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான ‘மலையகம் – 200’ எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி அரச அங்கீகாரத்துடன் ‘மலையகம் – 200’ விழாவை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வு நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தியும், நிகழ்வின் இறுதி அம்சங்கள் கொழும்பிலும் நடத்தப்படவுள்ளது.

அத்துடன், மலையகம் – 200 தொடர்பில் பாடசாலை மட்டத்திலும், பல்கலைக்கழகங்கள் மட்டத்திலும், இதர பிரிவுகளிலும் போட்டிகளையும் நடத்துவதற்கும் ஆக்கங்கள் மற்றும் படைப்புகளை கோருவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், விசேட ஊடக சந்திப்பின் ஊடாக திகதி, கால நேரம் உள்ளிட்ட விபரங்கள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

மலையக தமிழர்களின் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்கள் இந்நாட்டுக்கு ஆற்றிய சேவையை கௌரவிப்பதற்கு அரசு தீர்மானித்திருந்த நிலையில், அதற்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கே அமைச்சரால் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டது.

‘மலையகம் – 200’ நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள், இராஜதந்திரிகள், கலைஞர்கள் என பலரும் பங்கேற்கவுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles