‘மலையகம் – 200’ வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்!

மலையக பெருதோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் நிறைவடைந்ததையடுத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் இடையில் கொழும்பில் தொழில் அமைச்சில் இடம்பெற்றது.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் ஆகின்றது. எனவே, அவர்களின் தொழிற்துறையும் பாதுகாக்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு என்று பல சட்ட ஏற்பாடுகள் காணப்பட்டாலும், அது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நடைமுறைப்படுத்தும் வாய்ப்புகள் குறைவு. அத்தோடு, தொழிலாளர்களுக்கு தொழில் திணைக்களங்களில் வழங்கப்படும் முக்கியத்துவங்கள் மிகவும் குறைவாகவே உள்ளது.

இதனால் பெருந்தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்கும் உரிமை சார்ந்த மற்றும் நலன்புரி சார்ந்த சட்ட மூலத்தை உருவாக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தரப்பினர் மூலம் அமைச்சருக்கு யோசனை முன்வைக்கப்பட்டதாக அதன் உப தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் ஏனைய தொழிற்சங்கங்கள், சமூக ஆர்வாலர்கள், சிவில் அமைப்புகள் அனைத்து தரப்பினரையும் இணைத்து இந்த 200 வருடத்தில் நாட்டிற்கு பொருளாதார ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் அடையாளத்தை ஏற்படுத்திய பெருந்தோட்ட தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையிலான கருத்துகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

இந்த கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், உப தலைவர் பாரத் அருள்சாமி, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் ஒன்றிணைந்த மலையக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles